search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத், சத்தீஸ்கரில் ஏழுமலையான் கோவில் கட்ட நடவடிக்கை
    X

    குஜராத், சத்தீஸ்கரில் ஏழுமலையான் கோவில் கட்ட நடவடிக்கை

    • திருப்பதியில் ராமானுஜர் சந்திப்பு முதல் ரேணிகுண்டா வரை ரூ.5.61 கோடியில் சாலை அமைக்கப்படும்.
    • மழை காரணமாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தது.

    திருப்பதி:

    திருப்பதி அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனுக்காக ரூ.4.15 கோடியில் கூடுதலாக லட்டு கவுண்ட்டர் கட்டப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்.

    திருமலை எஸ்.வி.சி. பகுதியில் 18 பிளாக்குகளில் 144 அறைகளின் புனரமைப்பு பணிகள் ரூ.2.35 கோடியில் மேற்கொள்ளப்படும்.

    திருப்பதியில் ராமானுஜர் சந்திப்பு முதல் ரேணிகுண்டா வரை ரூ.5.61 கோடியில் சாலை அமைக்கப்படும்.

    விரைவில் சத்தீஸ்கரின் தலைநகரான காந்தி நகர், குஜராத் மற்றும் ராய்ப்பூரில் ஏழுமலையான் கோவில்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

    திருமலைக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவதை தடுக்க அலிபிரியில் சோதனை சாவடியில் பலப்படுத்தப்படும். இதற்காக மாநில அரசுடன் கலந்தாலோசித்து தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறிய அதிநவீன தொழில்நுட்ப வாகன ஸ்கேனர்களை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் நேற்று 69 ஆயிரத்து 879 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 29 ஆயிரத்து 519 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.82 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    மழை காரணமாக கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்தது. பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×