search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்னாள் பிரதமர் நரசிம்மராவை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டது-  கவிதா பரபரப்பு பேச்சு
    X

    முன்னாள் பிரதமர் நரசிம்மராவை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டது- கவிதா பரபரப்பு பேச்சு

    • காங்கிரஸ் கட்சி நன்றியற்ற கட்சியாக மாறி உள்ளது.
    • எம்.எல்.சி.கவிதா காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள போர்கான் எக்ஸ்' சாலையில், பிராமண சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் சிலையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.எல்.சி யுமான கவிதா திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகளும் எம்.எல்.சி.யுமான சுரபி வாணி, பி.வி.பிரபாகர் ராவ், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கவிதா பேசியதாவது:-

    முன்னாள் பி.வி. நரசிம்மராவின் தலைமைப் பண்புகளையும், தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளையும் மறக்கமுடியாது.

    நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களை உருவாக்கியவர் பி.வி.நரசிம்மராவ். அவரை கவுரவிக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.

    காங்கிரஸ் கட்சி நன்றியற்ற கட்சியாக மாறி உள்ளது. காங்கிரஸ் கட்சி பி.வி. நரசிம்மராவை முற்றிலுமாக மறந்து அவர் கட்சிக்கு ஆற்றிய பங்களிப்பைப் புறக்கணித்துள்ளது.

    தெலுங்கான முதலமைச்சர் கே.சி. சந்திரசேகர ராவ் அவரது பங்களிப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், நரசிம்மாராவ் பிறந்த நாள் நூற்றாண்டை உலகம் முழுவதும் பெரிய அளவில் கொண்டாடினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எம்.எல்.சி.கவிதா காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×