என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி வீட்டின் மேல் டிரோன் பறந்ததால் பரபரப்பு
    X

    பிரதமர் மோடி வீட்டின் மேல் டிரோன் பறந்ததால் பரபரப்பு

    • அந்தப் பகுதியில் விமானம் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது
    • விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    பிரதமர் மோடி வீட்டின் மேல் இன்று காலை ஆளில்லா விமானம் பறந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் விமானம் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 5.30 மணியளவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலால் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், போலீஸ் மற்றும் இதர பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகத்திற்குரிய வகையில் பறந்த பொருளை பார்க்கவில்லை எனத்தெரிவித்துள்ளது.

    விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டபோதும், அவர்களும் அதுபோன்ற எந்த பொருட்கள் தென்பட்டதாக தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×