என் மலர்tooltip icon

    இந்தியா

    மங்களூருவில் ஓய்வு பெற்ற பெண் ஊழியரிடம் டிஜிட்டல் கைது செய்து ரூ.3 கோடி பறிப்பு
    X

    மங்களூருவில் ஓய்வு பெற்ற பெண் ஊழியரிடம் டிஜிட்டல் கைது செய்து ரூ.3 கோடி பறிப்பு

    • பணத்தை மர்ம நபரின் கணக்கில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
    • டிஜிட்டல் கைது என கூறும் அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் ஊழியர் லெனி பிரபு. இவருடைய செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் வந்தது.

    இதையடுத்து லெனி பிரபு அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர், தான் சட்ட அமலாக்க அதிகாரி. உங்களது பெயரில் சீனாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் 150 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை பொருள் இருப்பதாக கூறினார்.

    அந்த பார்சலை கோர்ட்டில் ஒப்படைத்தால் 75 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை விதிக்கப்படும். தண்டனையில் இருந்து தப்பிக்க உங்களுக்கு தடையில்லா சான்றிதழை பெற என்னால் உதவ முடியும். அதுவரை உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்குமாறு மிரட்டினார்.

    இதனால் பயந்த லெனி பிரபு முதலில் ரூ.55 லட்சத்தை அந்த நபரின் கணக்கிற்கு அனுப்பினார். மொத்தம் ரூ.3.09 கோடி பல பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பினார்.

    இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் டிஜிட்டல் கைது என்பது மோசடி. உங்களை ஏமாற்றி சைபர் கிரைம் மோசடி கும்பல் பணத்தை பறித்துள்ளனர் என தெரிவிக்கவே அதிர்ச்சி அடைந்த லெனி பிரபு மங்களூரு சைபர் எக்னாமிக் அண்ட் நார்கோடிக்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட பணத்தை மர்ம நபரின் கணக்கில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    சைபர் மோசடி குற்றவாளிகள் பெரும்பாலும் சி.பி.ஐ. அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் அல்லது சுங்க அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு செல்போன் அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்வார்கள். டிஜிட்டல் கைது என கூறும் அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×