என் மலர்tooltip icon

    இந்தியா

    தர்மஸ்தலா கோவில் நிலத்தில் பெண்கள் கொன்று புதைப்பு?.. புகார் அளித்தவர் கைது
    X

    தர்மஸ்தலா கோவில் நிலத்தில் பெண்கள் கொன்று புதைப்பு?.. புகார் அளித்தவர் கைது

    • தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.
    • பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை புதைத்ததாக ஒரு புகார் அளித்தார்.

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்று உடல்களை கோவில் நிலத்திலேயே புதைத்துவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.

    இதை விசாரிக்க சிறப்பு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சியில் ஆண் ஒருவரின் எலும்புக்கூடு மற்றும் பல எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.

    இந்நிலையில், பெண்கள், மாணவிகளின் உடல்களை புதைத்ததாக புகார் அளித்த முன்னாள் தூய்மைப் பணியாளரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர். தவறான தகவல்களை வழங்கிப் போலீசாரை ஏமாற்றியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×