என் மலர்

  இந்தியா

  திருப்பதியில் 3 வாரங்களுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
  X

  திருப்பதியில் 3 வாரங்களுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவு இருந்தது.
  • பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசன நேரம் மேலும் கூடுதலாகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

  திருப்பதி:

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

  பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவு இருந்தது. தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறி வந்தனர்.

  இந்த நிலையில் கடந்த 3 வாரங்களாக பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் 4 முதல் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். இந்த நிலையில் வார விடுமுறை நாளான இன்று மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் அறையான வைகுண்ட காம்ப்ளக்ஸ் முழுவதும் நிரம்பியது. பக்தர்கள் 15 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

  ரூ.300 தரிசன டிக்கெட்டில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசன நேரம் மேலும் கூடுதலாகும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

  திருப்பதியில் நேற்று 77,541 பேர் தரிசனம் செய்தனர். 39,533 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.87 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

  Next Story
  ×