search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் 2025-ம் ஆண்டிற்குள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் இயக்க முடிவு
    X

    டெல்லியில் 2025-ம் ஆண்டிற்குள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் இயக்க முடிவு

    • 12 மீட்டர் நீளமுள்ள 570 மின்சார பேருந்துகள் போக்குவரத்துத் துறைக்கு வழங்கப்படும் என அறிவிப்பு.
    • 2025ம் ஆண்டுக்குள் டெல்லியின் சாலைகளில் 10,000 பேருந்துகள் இயக்கப்படும்

    டெல்லி அரசு 2025 டிசம்பருக்குள் 2,026 மின்சார பேருந்துகளை தனது சேவையில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது. இதில், முதல் 100 பேருந்துகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் மிகப்பெரிய மின்சார பேருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பிஎம்ஐ எலக்ட்ரோ, டெல்லி போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து துறைக்கு தலா 728 ஒன்பது மீட்டர் நீளமுள்ள மின்சார பேருந்துகளை வழங்குவதாக அறிவித்தது.

    இது தவிர, 12 மீட்டர் நீளமுள்ள 570 மின்சார பேருந்துகள் போக்குவரத்துத் துறைக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அறிக்கையின்படி, 2026 மின்சார பேருந்துகள் இயக்குவதன் மூலம் அடுத்த 12 ஆண்டுகளுக்கு டெல்லியில் 14.50 லட்சம் டன் கார்பன்டை ஆக்சைடை சேமிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

    இதுகுறித்து பிஎம்ஐ எலக்ட்ரோவின் தலைவர் சதீஷ் ஜெயின் கூறுகையில், "டெல்லி அரசாங்கத்திற்கு பேருந்துகளை சீராகப் பராமரிப்பதில் நிறுவனம் உதவும்" என்றார்.

    டிஎம்ஆர்சி உத்தரவின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட பிஎம்ஐயின் 100 பேருந்துகள் தற்போது டெல்லியில் இயங்கி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மின்சார பேருந்துகள் அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், உகந்த செயல்திறன், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்கிறது.

    நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் பேருந்துகள் இயங்குகின்றன.

    இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "2025ம் ஆண்டுக்குள் டெல்லியின் சாலைகளில் 10,000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அவற்றில் 80 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் என்றும் பலமுறை எடுத்துரைத்துள்ளேன்" என்றார்.

    Next Story
    ×