என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜெகதீப் தன்கருக்கு எதிராக பதவி நீக்க நோட்டீஸ்: ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு
    X

    ஜெகதீப் தன்கருக்கு எதிராக பதவி நீக்க நோட்டீஸ்: ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு

    • ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர் பாராளுமன்ற மேல்சபையின் தலைவராக இருக்கிறார். அவருக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே அவையில் மோதல் ஏற்படுகிறது. ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த நிலையில் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் அளிப்பது என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.

    சட்டப்பிரிவு 67(பி)ன்படி இந்த நோட்டீஸ் சமர்பிக்கப்பட்டது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, இடதுாரி கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நோட்டீசில் கையெழுத்திட்டனர்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா? என்பது சந்தேகம்தான். பாராளுமன்றத்தில் இருக்கும் எம்.பி.க்களில் 50 சதவீதத்துடன் மேலும் ஒரு எம்.பி. ஆதரவு தேவை. அப்படி ஆதரவு இருந்தால்தான் மேல்சபை தலைவரை பதவியில் இருந்து நீக்க முடியும்.

    அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் சோனியா காந்தி- ஜார்ஜ் சோரோ விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த 25 -ந்தேதி பாராளுமன்றம் கூடியது. அதில் இருந்து ஒருநாள் கூட அவை முழுமையாக நடைபெறவில்லை. கடும் அமளியில் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×