என் மலர்tooltip icon

    இந்தியா

    டிக்கெட் விலையை 2014 உடன் 2024-ஐ ஒப்பிட்ட காங்கிரஸ்: ரெயில்வே அமைச்சகத்தின் பதில் என்ன?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டிக்கெட் விலையை 2014 உடன் 2024-ஐ ஒப்பிட்ட காங்கிரஸ்: ரெயில்வே அமைச்சகத்தின் பதில் என்ன?

    • படுக்கை வசதியான ஸ்லீப்பருக்கு 2014-ல் 441 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
    • 2024-ல் 623 ரூபாய் வசூலிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் 2014-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரெயில் டிக்கெட் விலை எவ்வளவு இருந்தது?. தற்போது 2024-ல் பாஜக ஆட்சியில் எவ்வளவு இருக்கிறது? என்பது குறித்து ஒரு டேட்டாவை ஒப்பிட்டு போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

    அதில் 1300 கி.மீட்டர் பயணம் செய்ய மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பருக்கு 441 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது 623 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

    (ஏசி) இருக்கை வகுப்பிற்கு 2014-ல் 917 ரூபாய் வசூலிக்கப்பட்டது. 2024-ல் 1293 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

    3-ம் வகுப்பு ஏசிக்கு 2014-ல் 1151 ரூபாய் வசூலிக்கப்பட்டது. 2024-ல் 1608 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

    2-ம் வகுப்பு ஏசிக்கு 2014-ல் 1688 ரூபாய் வசூலிக்கப்பட்டது. 2024-ல் 2328 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

    முதல் வகுப்பு ஏசிக்கு 2014-ல் 2915 ரூபாய் வசூலிக்கப்பட்டது. 2024-ல் 3974 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இதற்கு ரெயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் "சார், பகிரப்பட்ட தரவு உண்மையான தரவுடன் பொருந்தவில்லை" எனத் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×