என் மலர்tooltip icon

    இந்தியா

    CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து.. இனி 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் FAIL
    X

    CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து.. இனி 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் FAIL

    • தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் இந்த திருத்தும் செய்யப்பட்டுள்ளது.
    • 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் என கருதப்படும்.

    மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் சிபிஎஸ்சி பள்ளிகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது.

    இதற்கு முன்பாக 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் கட்டாயத்தை தேர்ச்சி முறை அமலில் இருந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் இந்த திருத்தும் செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் என கருதப்படும்.

    இருப்பினும், ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால் இந்த முறை அடுத்த ஆண்டில் இருந்துதான் முழுமையாக செயல்படுத்தப்படும் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×