என் மலர்
இந்தியா

கியூட் முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை
- நடப்பு கல்வி ஆண்டில் முதுநிலை படிப்புக்கான கியூட் தேர்வை 6.07 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
- கியூட் முதுநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.
இதற்கிடையே, கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை கடந்த 16ம் தேதி வெளியிட்டது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுநிலை படிப்புக்கான கியூட் தேர்வை 6.07 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் 3.05 லட்சம் பெண்கள் அடங்குவர்.
இந்நிலையில், கியூட் முதுநிலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று மாலை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






