என் மலர்
இந்தியா

9 பேருடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு பறிமுதல்
- இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, காவல்படை துரத்தி பிடித்தது.
- போர்பந்தருக்கு படகு கொண்டு வரப்பட்டுள்ளது.
சர்வதேச கடலோர எல்லைப் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது. மேலும், அந்த படகில் இருந்து 9 பேரை கைது செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகு, குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு கொண்டு சொல்லப்படுகிறது. நேற்று கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் அரேபிய கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துபோது பாகிஸ்தானின் மீன்பிடி படகு இந்திய எல்லைக்குள் தென்பட்டதை கண்டனர். இதனைத் தொடர்ந்து படகை பறிமுதல் செய்துள்ளனர்.
கப்பலை கண்டதும் பாகிஸ்தான் படகு, பாகிஸ்தான் எல்லைக்குள் செல்ல முயன்றுள்ளனர். இருந்தபோதிலும், கடலோர காவல்படையினர் அந்த படகை இடைமறித்து, படகில் ஏறி பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story






