என் மலர்
இந்தியா

ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரெயில் எஞ்சினில் இருந்து தனியாக பிரிந்த பெட்டிகள்..
- செகந்திராபாத்-ஹவுரா ஃபலக்னுமா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டுருந்தது.
- பெட்டிகள் பிரிந்ததை அறிந்த பயணிகள் எச்சரித்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலாசா அருகே இன்று காலை செகந்திராபாத்-ஹவுரா ஃபலக்னுமா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டுருந்தது.
அப்போது எஞ்சினில் இருந்து ரெயில் பெட்டிகள் தனியாகப் பிரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்டிகள் பிரிந்ததை அறிந்த பயணிகள் எச்சரித்ததை அடுத்து ரெயில் எஞ்சினை பின்னோக்கி இயக்கி பெட்டிகளுடன் மீண்டும் இணைக்கப்பட்டது.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, இணைப்பு செயலிழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய முயன்றுள்ளனர்.
Next Story






