என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடமைகளை நிறைவேற்றுவார் என நம்புகிறேன் - சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
- சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
- உறுதியுடன் போராடிய திரு. சுதர்ஷன் ரெட்டியையும் நான் பாராட்டுகிறேன்.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.
இதன்மூலம் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்திய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அரசியலமைப்பு கட்டமைப்பு மற்றும் நமது நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஏற்ப அவர் தனது கடமைகளை உறுதியுடன் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.
இந்தியாவின் ஜனநாயகத்தின் உணர்வைகளையும், நமது கொள்கைகளையும் பிரதிபலித்து உறுதியுடன் போராடிய திரு. சுதர்ஷன் ரெட்டியையும் நான் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






