என் மலர்
இந்தியா

4 மாநிலங்களில் இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு விறுவிறுப்பு
- மேற்கு வங்காள மாநிலம் காளிகஞ்ச் எம்.எல்.ஏ. நசிரூதின் அகமது உயிரிழந்தார்.
- காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஓட்டளித்தனர்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் காடி தொகுதி எம்.எல்.ஏ கார்சந்த்பாய் சோலங்கி மரணம் அடைந்ததைதொடர்ந்து அத்தொகுதி காலியாக உள்ளது. மற்றொரு தொகுதியான விஸ்வதாரின் எம்.எல்.ஏ பலனி பூபேந்திர சந்து பாய் மற்றும் கேரள மாநிலம் நீலாம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ. பி.வி. அன்வர் ஆகியோர் ராஜினாமா செய்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த குர்பிரீத் பஸ்சி கோகி மற்றும் மேற்கு வங்காள மாநிலம் காளிகஞ்ச் எம்.எல்.ஏ. நசிரூதின் அகமது ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த 5 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது. இத்தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.






