என் மலர்
இந்தியா

உத்தரபிரதேசத்தில் திருமணத்தில் நடனமாடிய மணப்பெண் திடீர் மரணம்
- அவருடன் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நடனம் ஆடினர்.
- மணப்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் படாவூன் மாவட்டம் நூர்பூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இதனால் நேற்று முன்தினம் இரவு மணப்பெண்ணிற்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மணப்பெண் மகிழ்ச்சியாக நடனம் ஆடினார்.
அவருடன் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நடனம் ஆடினர். ஆட்டம் பாட்டம் என விழா களை கட்டியது.
அப்போது மணப்பெண் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் மணப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மணப்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மணப்பெண் இறந்ததால் மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தங்களது மகளுக்கு எந்தவிதமான நோய்களும் இல்லை. ஆனால் ஏன் மயங்கி விழுந்து இறந்தார் என தெரியவில்லை என கூறினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






