என் மலர்
இந்தியா

தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் தலையில் செருப்பால் அடித்து ஆசீர்வாதம்- தெலுங்கானா கோவிலில் வினோதம்
- பிரம்மோற்சவ விழாவின்போது சாமியின் காலணிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர்.
- இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பாரம்பரிய படி நடந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் ஜட் சர்லா அடுத்த கங்காபுரத்தில் லட்சுமி சென்ன கேசவ சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவின்போது சாமியின் காலணிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர்.
பின்னர் கோவிலில் சாமி தரிசனம் முடிந்து வெளியே வரும் பக்தர்களின் தலையில் சாமியின் செருப்பால் அடித்து ஆசீர்வாதம் செய்து அனுப்புகின்றனர்.
இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பாரம்பரிய படி நடந்து வருகிறது. சாமியின் செருப்பால் ஆசீர்வாதம் வாங்கும் பக்தர்களை சாமி நலமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை என தெரிவித்தனர்.
Next Story






