என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் தேர்தல் தோல்வி: காந்தி ஆசிரமத்தில் மௌன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!
    X

    பீகார் தேர்தல் தோல்வி: காந்தி ஆசிரமத்தில் மௌன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

    • இன்று பீகார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
    • 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.

    நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பாஜக- ஜெடியு-வின் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆஜேடி-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது. இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.

    இதற்கிடையே கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நாளில் ஜன் சுராஜ் என்ற கட்சியை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கினார்.

    பீகாரில் நிதிஷ் குமாரின் ஜெடியுவிக்கு தனது கட்சி தான் மாற்று என்று பிரசாரம் செய்த ஜன்சுராஜ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தெரிதலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பின் என்டிஏ கூட்டணி பீகாரில் ஒன்றரை கோடி பெண்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அதன் வெற்றிக்கு காரணம் என்றும் உலக வங்கி வழங்கிய ரூ.12,000 கோடி நிதியை தேர்தலில் வெல்ல என்டிஏ தவறாக பயன்படுத்தியதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டினார்.

    அதேநேரம் ஜன் சுராஜ் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாகவும், பீகாரில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன் எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

    இந்த சூழலில் தோல்விக்கு பிராயச்சித்தமாக பிரசாந்த் கிஷோர் ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டுள்ளார்.

    பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மெளன விரதம் இருக்கும் அவருடன் ஜன் சுராஜ் லத் தலைவர் மனோஜ் பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

    பிரசாந்த் கிஷோர் இன்று மெளன விரதம் இருக்கும் இதே இடத்தில்தான், நூற்றாண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி மெளன விரதம் மேற்கொண்டார். முன்னதாக ஜன் சுராஜ் கட்சியை தொடங்கும் முன் இதே இடத்தில் இருந்து 3,500 கி.மீ நடைப்பயணத்தை பிரசாத் கிஷோர் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×