'நச்சு சித்தாந்தத்தின் கொடூர முகம்' - காலணி வீச்சு குறித்து பி.ஆர்.கவாயின் குடும்பத்தினர் கருத்து

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் தனி நபர் மீதானது அல்ல, அரசியலமைப்பின் மீதான தாக்குதல்வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.
'நச்சு சித்தாந்தத்தின் கொடூர முகம்' - காலணி வீச்சு குறித்து பி.ஆர்.கவாயின் குடும்பத்தினர் கருத்து
Published on

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நேற்று முன் தினம் மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.

வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.

அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார். இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி மீதான தாக்குதல் தனி நபர் மீதானது அல்ல, அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று பி.ஆர்.கவாயின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய கவாயின் தங்கை, "இது ஒரு நபரின் தனிப்பட்ட தாக்குதல் அல்ல, மாறாக ஒரு நச்சு சித்தாந்தத்தால் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். இந்த வகையான அரசியலமைப்புக்கு எதிரான தாக்குதலை நாம் நிறுத்த வேண்டும். அரசியலமைப்பிற்கு எதிராக யாராவது செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது நச்சு சித்தாந்தத்தின் கொடூர முகம் ஆகும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com