என் மலர்

  இந்தியா

  பட்டாக்கத்தியுடன் வந்த தலைமை ஆசிரியர்... பரபரப்பான பள்ளி வளாகம்
  X

  பட்டாக்கத்தியுடன் வந்த தலைமை ஆசிரியர்... பரபரப்பான பள்ளி வளாகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து தலைமை ஆசிரியரை பிடித்து விசாரித்தனர்.
  • பட்டாக்கத்தியுடன் வந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது

  கவுகாத்தி:

  அசாம் மாநிலம் சச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு பட்டாக்கத்தியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரிதிமேதா தாஸ் (வயது 38) என்ற அந்த ஆசிரியர் சில்சார் மாவட்டம் தாராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். 11 ஆண்டுகளாக அந்த பள்ளியில் வேலை பார்த்து வரும் அவர் கோபத்தில் கத்தியுடன் வந்ததைப் பார்த்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து தலைமை ஆசிரியரை பிடித்து விசாரித்தனர்.

  மற்ற ஆசிரியர்களின் முறைகேடுகளால் கோபம் மற்றும் விரக்தி அடைந்ததாகவும், கத்தியைக் காட்டி அவர்களை எச்சரிக்க முயன்றதாகவும் தலைமை ஆசிரியர் கூறியிருக்கிறார்.

  ஆசிரியர் பட்டாக்கத்தியுடன் வந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவர் மீது யாரும் புகார் கொடுக்காததால் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

  Next Story
  ×