search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாம், மேகாலயாவில் மழை நீடிப்பு- வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 54 பேர் பலி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அசாம், மேகாலயாவில் மழை நீடிப்பு- வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 54 பேர் பலி

    • அசாமில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
    • அசாம் மாநிலத்தை போல மேகாலயா மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    கவுகாத்தி:

    அசாம், மேகாலயா மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக மாநிலம் முழுவதும் 2930-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ஹோஜாய், நல்பாரி, பஜாலி, துப்ரி, கம்ரூப், கோக்ராஜார், சோனித்பூர் மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பகலாடியா, புத்திமாரி, ஜியா பரலி, கோபிலி, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகளில் வெள்ளம் அபாயகட்டத்தை தாண்டி ஓடுகிறது. பல இடங்களில் ஆற்றின் கரைகள் உடைந்து விளைநிலங்களில் வெள்ளம் புகுந்தது.

    இதன் காரணமாக பயிர் நிலங்கள் சேதம் அடைந்துள்ளது. சுமார் 43 ஆயிரத்து 398 ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    அசாமில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் இடிந்தும், மரம் முறிந்து விழுந்தும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது.

    அசாம் மாநிலத்தில் மட்டும் மழைக்கு இதுவரை 54 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 7 பேர் இறந்துள்ளனர்.

    அசாம் மாநிலத்தை போல மேகாலயா மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இங்குள்ள மயிஸ்னராம் பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1003.6 மி.மீட்டர் மழை பெய்தது.

    மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் இவர்களை ரப்பர் படகுகள் மூலம் முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.

    Next Story
    ×