என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் பயணி கழிவறையில் இருந்தபோது  கதவைத் திறந்து பார்த்த விமானி - இண்டிகோ விமானத்தில் நடந்த சம்பவம்
    X

    பெண் பயணி கழிவறையில் இருந்தபோது கதவைத் திறந்து பார்த்த விமானி - இண்டிகோ விமானத்தில் நடந்த சம்பவம்

    • விமானப் பணிப்பெண்கள் இந்த சம்பவத்தை அலட்சியம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
    • அலட்சியமான பதில் தனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இண்டிகோ விமானத்தில் கடந்த . ஆகஸ்ட் 8 அன்று மும்பையைச் சேர்ந்த ரியா சட்டர்ஜி என்ற பெண் பயணம் செய்துள்ளார்.

    இந்நிலையில் தான் விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்துவிட்டதாகக் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அவர் தனது LinkedIn பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது தனக்கு அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    கதவைத் திறந்த இணை விமானி "ஓ" என்று சொல்லிவிட்டு உடனடியாக கதவை மூடிவிட்டதாகவும், பின்னர் விமானப் பணிப்பெண்கள் இந்த சம்பவத்தை அலட்சியம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். விமான ஊழியர்களின் இத்தகைய அலட்சியமான பதில் தனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    சம்பவம் குறித்து விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியும், நிறுவனம் முறையாகப் பதிலளிக்கவில்லை என்றும், வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, இது ஒரு சாதாரண சிரமம் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தனக்கு இழப்பீடு வேண்டாம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

    இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×