என் மலர்tooltip icon

    இந்தியா

    நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
    X

    நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு

    • பயணி ஒருவர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார்.
    • பயணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மும்பை:

    நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானம் மும்பை விமான நிலையத்தில் தரை இறங்கும் நேரத்தில் அதில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றார்.

    இது தொடர்பாக விமான ஊழியர்கள் புகார் செய்தனர். அந்த பயணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் 'விமானத்தை பாதுகாப்பாக இயக்குவதில் எந்த சமரசமும் கிடையாது' என்று விளக்கம் அளித்து உள்ளது.

    Next Story
    ×