search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் 30 சதவீத பெண்களுக்கு 21 வயதிற்குள் திருமணம்- புள்ளி விபரங்களில் தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இந்தியாவில் 30 சதவீத பெண்களுக்கு 21 வயதிற்குள் திருமணம்- புள்ளி விபரங்களில் தகவல்

    • ஜம்மு காஷ்மீரில் திருமணத்தின் அதிகபட்ச சராசரி வயது 26 ஆக உள்ளது.
    • கடந்த 2020-ம் ஆண்டில் கேரளாவில் 18 வயதுக்குட்பட்ட திருமணம் எதுவும் இல்லை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக பெண்களுக்கு 18, ஆண்களுக்கு 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்டில் பெரும்பான்மையான பெண்கள் 21 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டிருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.

    மேற்கு வங்கத்தில் சராசரியாக 50.2 சதவீதம், ஜார்க்கண்டில் 48.8 சதவீத பெண்களுக்கு 21 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் டெல்லியில் இந்த சதவீதம் 15.5 ஆக உள்ளது.

    நாடு முழுவதும் ஏறக்குறைய 30 சதவீத பெண்கள் தங்கள் 21 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்ற அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    ஜம்மு காஷ்மீரில் திருமணத்தின் அதிகபட்ச சராசரி வயது 26 ஆக உள்ளது.

    அங்கு 21 வயதிற்குள் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் சதவீதம் 8.2 ஆக உள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லியில் திருமணத்தின் அதிகபட்ச சராசரி வயது 24.4 ஆக இருக்கிறது. இந்த விகிதம் மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்டில் 21 ஆகவும், ஒடிசாவில் 22 ஆகவும் மிகக் குறைவாக இருந்தது.

    கடந்த 2020-ம் ஆண்டில் கேரளாவில் 18 வயதுக்குட்பட்ட திருமணம் எதுவும் இல்லை. கேரளாவில் 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை பீகாரை போல 72.6 சதவீதமாக உள்ளது.

    மொத்தத்தில் நாடு முழுவதும் 70.5 சதவீத பெண்களுக்கு 21 வயதிற்கு மேல் திருமணம் நடப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் ஜம்மு காஷ்மீரில் 90.7 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.

    குஜராத்தில் 85.2 சதவீதம், உத்தரகாண்டில் 84 சதவீதம், பஞ்சாபில் 83 சதவீதம், மகாராஷ்டிரத்தில் 82.7 சதவீதத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    இந்தியாவில் உள்ள கிராமப்புற பெண்களில் 3-ல் ஒரு பகுதியினர் 18 முதல் 20 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது நகர்ப்புறங்களில் 18.6 சதவீதம் ஆகும்.

    18 வயதிற்குட்பட்ட திருமணங்கள் ஜார்க்கண்டில் அதிகமாக (5.8 சதவீதம்) உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் மேற்குவங்கம் (4.7 சதவீதம்) உள்ளது. ஒடிசா, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இந்த சதவீதம் 3-க்கும் அதிகமாக உள்ளது.

    Next Story
    ×