search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு
    X

    மணிப்பூர் நிலச்சரிவு

    மணிப்பூர் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு

    • மணிப்பூரில் இன்று மேலும் 3 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன.
    • நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது.

    இம்பால்:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரெயில்வே கட்டுமானப் பணி நடந்தது. ஜூன் 30 அன்று அப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் நிலச்சரிவில் சிக்கினர்.

    ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் மேலும் 3 உடல்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டனர். இதையடுத்து, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான 8 பேரை தேடும் பணிகள் நடைபெறுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×