என் மலர்tooltip icon

    இந்தியா

    குலாம்நபி ஆசாத்
    X
    குலாம்நபி ஆசாத்

    சோனியா கொடுத்த பதவியை குலாம்நபி ஆசாத் ஏற்க மறுப்பு

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் குலாம்நபி ஆசாத் உள்பட அதிருப்தியாளர்கள் யாருக்கும் மீண்டும் எம்.பி. ஆகும் வாய்ப்பை காங்கிரஸ் மேலிடம் வழங்கவில்லை. இதனால் சோனியா-ராகுல் மீது அதிருப்தியாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத்தில் இருந்து தலைமை வரை மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று குலாம்நபி ஆசாத் தலைமையில் பல மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் குலாம்நபி ஆசாத் உள்பட அதிருப்தியாளர்கள் யாருக்கும் மீண்டும் எம்.பி. ஆகும் வாய்ப்பை காங்கிரஸ் மேலிடம் வழங்கவில்லை. இதனால் சோனியா-ராகுல் மீது அதிருப்தியாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

    அதிருப்தியாளர்களில் சிலர் பா.ஜனதாவுக்கு தாவ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து குலாம்நபி ஆசாத்தை சோனியா அழைத்து பேசினார். அப்போது காங்கிரசில் தனக்கு அடுத்த இடமான 2-வது இடத்தை தருவதற்கு தயாராக இருப்பதாக சோனியா தெரிவித்தார்.

    ஆனால் இதை குலாம்நபி ஆசாத் ஏற்கவில்லை. எம்.பி. பதவி கிடைக்காத வருத்தத்தில் இருக்கும் அவர் கட்சியை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×