என் மலர்

  இந்தியா

  மம்தா பானர்ஜி
  X
  மம்தா பானர்ஜி

  அசானி புயல்: சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்த மம்தா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜார்கிராம் மற்றும் பாஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டங்களில், அரசின் பல்வேறு சமூகத் திட்டங்களின் நிலையை மம்தா பானர்ஜி ஆய்வு செய்வார்.
  கொல்கத்தா:

  மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கிராம் மற்றும் பாஸ்சிம் மேதினிப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு  மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார்.  

  இந்த மாதம் 10-ஆம் தேதியிலிருந்து 12-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட வேண்டிய இந்த சுற்றுப்பயணம், அசானி புயல் காரணமாக 17-ஆம் தேதியிலிருந்து 19-ஆம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

  மே 17 ஆம் தேதி மேதினிப்பூர் கல்லூரி மைதானத்தில் மாலை 5 மணியளவில் நிர்வாகக் கூட்டத்தை மம்தா பானர்ஜி நடத்த உள்ளார். அதன்பின்னர், மறுநாள் அதே இடத்தில் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார். மே 19ம் தேதி ஜார்கிராமில் நிர்வாக கூட்டம் மற்றும் கட்சி கூட்டம் நடைபெறும், என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  அதுமட்டுமல்லாமல்,  இரு மாவட்டங்களிலும் அரசின் பல்வேறு சமூகத் திட்டங்களின் நிலையை மம்தா பானர்ஜி ஆய்வு செய்ய உள்ளார். 

  மேலும், இரு மாவட்டங்களிலும் புயல் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
  Next Story
  ×