என் மலர்
இந்தியா

மேகாலயா முதல்-மந்திரி கான்ராட் சங்மா
மேகாலயா முதல்-மந்திரிக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
மே மாதம் 1-ந்தேதி முதல் ஒவ்வொரு வாரமும் குண்டு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஷில்லாங்:
மேகாலயா முதல்-மந்திரியாக பதவி வகித்து வருபவர் கான்ராட் சங்மா. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதே போல வடகிழக்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அதில் மே மாதம் 1-ந்தேதி முதல் ஒவ்வொரு வாரமும் குண்டு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
எங்களது முதல் இலக்கு கல்வி அலுவலகம் என தெரிவிக்கபட்டு இருந்தது. இந்த கடிதத்தை பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய மாணவர் அமைப்பை சேர்ந்த யாராவது அனுப்பி இருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். எந்த மையத்தில் இருந்து இ-மெயில் அனுப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story






