search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    ஹிஜாப் மேல்முறையீடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 21-ந்தேதி விசாரணை

    வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 6 மாணவிகள் அப்பீல் செய்துள்ளனர்.
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

    இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகளில் சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி கடந்த மாதம் 5-ந் தேதி கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் மாணவிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

    பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த கர்நாடகா ஐகோர்ட்டு வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று நேற்று அறிவித்தது.

    வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 6 மாணவிகள் அப்பீல் செய்துள்ளனர்.

    இந்த அப்பீல் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் இதை ஏற்றது. அதே நேரத்தில் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.

    ஹோலி பண்டிகைக்கு பிறகு இந்த அப்பீல் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. இதனால் வருகிற 21-ந்தேதி இந்த வழக்கு சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வருகிறது.

    Next Story
    ×