search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
    X
    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

    திரிபுராவில் அரசு வேலைகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்- அமித் ஷா

    திரிபுராவில் பாஜக - திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி அரசின் நான்காம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பேரணி நடைபெற்றது.
    வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜக - திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி அரசின் நான்காம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பேரணி நடைபெற்றது.

    பேரணியில் கலந்துக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:-

    திரிபுராவில் தற்போதைய பாஜக அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகி உள்ளது. தனிநபர் வருமானம் ரூ.1.3 லட்சமாக அதிகரித்துள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளுடன் அகர்தலா நகரம், ரெயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 542 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. திரிபுராவில் கொடூரமான குற்றங்களில் 30 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. தண்டனை விகிதம் 5-ல் இருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திரிபுராவில் அரசு வேலைகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும். முந்தைய தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஆளும் ஆட்சி நிறைவேற்றி உள்ளது.

     பிப்லாப் தேப்பின் நிர்வாகம், அரசியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைப்பெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக திரிபுராவுக்குத் திரும்பி வாக்குக் கேட்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. கேரளாவில் அங்குசத்தால் குத்திய பாகனை மிதித்த யானை
    Next Story
    ×