என் மலர்

  இந்தியா

  கங்கேசானந்தா சுவாமி
  X
  கங்கேசானந்தா சுவாமி

  சாமியாரின் மர்ம உறுப்பை அறுத்த இளம்பெண்- 5 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய திருப்பம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சாமியாரின் மர்ம உறுப்பை அறுத்ததாக இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
  திருவனந்தபுரம்:

  கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்தா சுவாமி. இவர் திருவனந்தபுரத்தில் ஒரு ஆசிரம் நடத்தி வந்தார். அப்போது அங்குள்ள பக்தை ஒருவர் வீட்டில் அடிக்கடி சென்று தங்குவது வழக்கம்.

  அதன்படி சாமியார் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந் தேதி அந்த பக்தை வீட்டிற்கு சென்றிருந்தார்.

  அப்போது அங்கு மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சாமியார் கங்கேசானந்தா சுவாமி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பக்தையின் மகள் தன்னை கங்கேசானந்தா சுவாமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடம் இருந்து தற்காத்து கொள்ள அவரிடம் போராடினேன். அப்போது என்னை அவர் விடாமல் தொந்தரவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவருடன் தகராறில் ஈடுபட்டேன். என்னை தற்காத்து கொள்ளும் வகையில் வேறுவழியின்றி அவரை தாக்கினேன்.

  பின்னர் ஆத்திரத்தில் அவரது மர்மஉறுப்பை அறுத்தேன் என போலீசில் வாக்குமூலம் கொடுத்தார். இந்த சம்பவம் அப்போது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பக்தையின் மகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

  முதலில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் சாமியாரின் மர்ம உறுப்பை அறுத்தேன் என கூறிய அவர் பின்னர் நடந்த விசாரணையில் சாமியார் தனது மர்மஉறுப்பை தானே அறுத்து கொண்டதாகவும், பின்னர் தூங்கி கொண்டிருந்த போது வேறு யாரோ மர்மநபர்கள் அவரது மர்ம உறுப்பை வெட்டியதாவும் மாற்றிமாற்றி பேசினார். முண்ணுக்குப்பின் முரணாக பேசியதால் அந்த பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

  இதைத்தொடர்ந்து இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து அவரிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை மேற் கொண்டனர்.

  இந்நிலையில் இந்த வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இளம்பெண் அய்யப்பதாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

  இதற்கு சாமியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவரை கொல்ல இருவரும் திட்டமிட்டுள்ளனர். இமற்காக சம்பவத்தன்று கொல்லம் கடற்கரையில் அமர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

  பின்னர் சாமியாரின் மர்ம உறுப்பை அறுத்து அவரை கொல்ல திட்டமிட்டு அதன்படி வீட்டிற்கு வந்த சாமியாரை தாக்கி மர்மஉறுப்பை அறுத்து கொலை செய்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதைத்தொடர்ந்து இளம்பெண் மற்றும் அவரது காதலன் அய்யப்ப தாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

  Next Story
  ×