என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்களித்த முதல்வர் பிரமோத் சாவந்த்
    X
    வாக்களித்த முதல்வர் பிரமோத் சாவந்த்

    பா.ஜ.க. 22 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெறும் - வாக்களித்த பிரமோத் சாவந்த் உறுதி

    தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என பிரதமர் மோடி தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு வாழ்த்தினார் என கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.
    பனாஜி:

    கோவாவில் இன்று ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என 4 முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளதால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

    வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.

    இந்நிலையில், கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்த் கோதாம்பியில் இன்று தனது வாக்கைப் பதிவு செய்தார். அப்போது பேசிய அவர், கோவாவில் 22 தொகுதிகளுக்கும் மேலான தொகுதிகளைப் பெற்று பா.ஜ.க. வெற்றி பெறும். பிரதமர் மோடியும் தொலைபேசியில் தொடர் கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என கூறினார்.

    Next Story
    ×