search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லாட்டரி சீட்டு
    X
    லாட்டரி சீட்டு

    லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு

    பரிசு தொகையின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
    அபுதாபி:

    கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லீனா ஜலால், அபுதாபியில் மனித வள வல்லுநராக பணிபுரிந்து வருகிறார். அங்குள்ள பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை அவர் வாங்கியிருந்தார்.வாராந்திர குலுக்கல் முறையில் பிப்ரவரி 3 ஆம் தேதி அந்த டிக்கெட்டிற்கு பரிசு கிடைத்தது. 

    பத்து பேருடன் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி லீனா ஜலாலுக்கு, 22 மில்லியன் திர்ஹம் பரிசு தொகை கிடைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.44 கோடியே 75 லட்சம் ரூபாய் அவருக்கு கிடைத்துள்ளது. பரிசு தொகையின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த சுரைஃப் சுரு என்பவருக்கும் லாட்டரி மூலம் அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. அவர் வாங்கிய டிக்கெட்டிற்கு 1 மில்லியன் திர்ஹம் ( ரூ.2 கோடி ) பரிசு கிடைத்துள்ளது. கேரளாவின் மல்லாபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரு, பரிசுத் தொகையை 29 பேருடன் பகிர்ந்து கொள்வதாகவும், அதில் ஒரு பகுதியை தனது ஏழை நண்பர்களுக்கு உதவ உள்ளதாகவும் கூறினார். 

    நான் என் பெற்றோருக்கு கொஞ்சம் பணம் தருவேன். எங்களின் எதிர் காலத்தைப் பாதுகாப்பதற்காக எனது மனைவி மற்றும் மகளுக்கு மீதியை சேமிக்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு, துபாயில் ஓட்டுநராகப் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த ஒருவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த லாட்டரி சீட்டு குலுக்கல் மூலம் ரூ. 40 கோடி ஜாக்பாட் வென்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×