என் மலர்

  இந்தியா

  அகிலேஷ் யாதவ்
  X
  அகிலேஷ் யாதவ்

  எங்களை டெல்லிக்கு அனுப்புங்கள்: அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்போம்- அகிலேஷ் யாதவ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அலிகாரில் பா.ஜனதாவுக்கான கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன. அதன் தலைவிதிக்கு பூட்டு போடப்பட்டது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
  உத்தர பிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் முதற்கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அலிகார் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொண்டார்.

  அப்போது அவர் ‘‘எங்களை டெல்லிக்கு அனுப்புங்கள். அனைத்து பிரச்சினைகளும் தீரும். சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பற்றி பேசுவோம். அலிகார் மக்கள் பா.ஜனதாவுக்கான கதவை மூடிவிட்டனர். பா.ஜனதாவின் விதிக்குக்கு பூட்டுபோட்டு சீல் வைத்துள்ளனர்.

  மாவ் பகுதியில் நடைபெற்ற என்னுடைய முதல் கூட்டத்தில், லக்னோவில் உள்ள பா.ஜனதாவின் தலைமையகம், மற்றும் பிற அலுவலகங்கள் மூடப்படும் என உறுதி அளித்ததுபோல் மூடப்படும். அலிகார் மக்கள் அதற்கு பூட்டு போடுவார்கள்’’ என்றார்.

  Next Story
  ×