search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராமானுஜர் சிலை
    X
    ராமானுஜர் சிலை

    ராமானுஜரின் 216 அடி உயர சிலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

    ஐதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
    ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி இன்று மாலை சிலையை திறந்து வைத்து நாட்டுடமையாக்குகிறார்.

    ராமானுஜர் சிலை

    வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும்  கல்விக்கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகளால் பஞ்சலோகத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியின்போது, ராமானுஜரின் வாழ்க்கை பயணம் மற்றும் போதனைகள் குறித்த 3D விளக்கக்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது.
    Next Story
    ×