என் மலர்
இந்தியா

மகாத்மா காந்தி நினைவு நாளில் பிரதமர் மோடி அஞ்சலி
மகாத்மா காந்தியின் லட்சியங்களை மேலும் பிரபலமாக்க கூட்டு முயற்சி - பிரதமர் மோடி உறுதி
நமது தேசத்தை பாதுகாத்த அனைத்து மாவீரர்களின் சேவைகளும் என்றென்றும் நினைவு கூரப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
மகாத்மா காந்தியின் 74-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக தமது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தகவலில்:
பாபுவின் புண்ணிய திதியில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது உன்னத இலட்சியங்களை மேலும் பிரபலப்படுத்துவது எங்கள் கூட்டு முயற்சி. தியாகிகள் தினமான இன்று, நமது தேசத்தை துணிச்சலுடன் பாதுகாத்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம்.
அவர்களின் சேவை மற்றும் துணிச்சல் என்றென்றும் நினைவு கூரப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






