search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இந்தியாவில் கொரோனா பாதித்த 22.49 லட்சம் பேருக்கு சிகிச்சை

    கர்நாடகாவில் கடந்த ஆண்டு மே மாதம் 5-ந் தேதி ஒருநாள் பாதிப்பு 50,112 ஆக இருந்தது. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியதோடு, இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,06,064 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 20-ந் தேதி பாதிப்பு 3.47 லட்சமாக இருந்த நிலையில், மறுநாள் 3.37 லட்சமாகவும், 22-ந் தேதி 3.33 லட்சமாகவும் சரிந்தது.

    இந்நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் பாதிப்பு குறைந்துள்ளது. அதே நேரம் தினசரி பாதிப்பு விகிதம் 17.78 சதவீதத்தில் இருந்து 20.75 ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம்16.87 சதவீதத்தில் இருந்து 17,03 ஆகவும் அதிகரித்தது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சத்து 43 ஆயிரத்து 328 ஆக உயர்ந்தது.

    நேற்று நாட்டில் அதிக பட்சமாக கர்நாடகாவில் 50,210 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் பாதிப்பு 42,470 ஆக இருந்த நிலையில், நேற்றைய பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை எட்டி உள்ளது.

    கர்நாடகாவில் கடந்த ஆண்டு மே மாதம் 5-ந் தேதி ஒருநாள் பாதிப்பு 50,112 ஆக இருந்தது. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியதோடு, இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்டுள்ளது.

    நேற்றைய பாதிப்பில் பாதிக்கும் மேல் தலைநகர் பெங்களூருவில் உள்ளது. அங்கு மட்டும் 26,299 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    பெங்களூருவில் நேற்று முன்தினம் 17,266 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி இருந்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகரித்திருப்பது அம்மாநில சுகாதாரத்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    கேரளாவில் புதிதாக 45,449 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு அதிகபட்சமாக எர்ணா குளத்தில் மட்டும் 11,091 பேரும், மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் 8,980 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று கேரளாவில் 1,01,252 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், தினசரி பாதிப்பு விகிதம் 44.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    மராட்டியத்தில் 40,805, தமிழ்நாட்டில் 30,580, குஜராத்தில் 16,617, ஆந்திராவில் 14,440, ராஜஸ்தானில் 14,112, உத்தரபிரதேசத்தில் 13,654, மத்தியபிரதேசத்தில் 11,253 பேர் நேற்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    தினசரி பாதிப்பு டெல்லியில் 9,197 ஆகவும், மேற்கு வங்கத்தில் 6,980 ஆகவும் சரிந்துள்ளது.

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 77 பேர், மராட்டியத்தில் 44, தமிழ்நாட்டில் 40, மேற்கு வங்கத்தில் 36, டெல்லியில் 34, பஞ்சாபில் 30 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 439 பேர் இறந்துள்ளனர்.

    இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,89,848 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3 கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 145 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதில் நேற்று மட்டும் 2,43,495 பேர் அடங்குவர்.

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,49,335 ஆக உயர்ந்தது. இது நேற்று முன்தினத்தைவிட 62,130 அதிகம் ஆகும்.

    நாடு முழுவதும் நேற்று 27,56,364 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 162 கோடியே 26 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

    விடுமுறை நாளான நேற்று நாடு முழுவதுமான பரிசோதனை 14,74,753 ஆக குறைந்துள்ளது. இதுவரை 71.69 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    இதையும் படியுங்கள்... தமிழக வாலிபர் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டது- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிறைவேற்றம்

    Next Story
    ×