என் மலர்tooltip icon

    இந்தியா

    நீளமாக மீசை வளர்த்த போலீஸ்காரர் சஸ்பெண்டு
    X
    நீளமாக மீசை வளர்த்த போலீஸ்காரர் சஸ்பெண்டு

    நீளமாக மீசை வளர்த்த போலீஸ்காரர் சஸ்பெண்டு

    மத்திய பிரதேசத்தில் பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக கூறி போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    போபால்:

    போலீஸ்காரர்கள் என்றால் அவர்களது தலைமுடிக்கு சில கட்டுபாடுகள் உண்டு. அவர்கள் சிகை அலங்காரத்தை பார்த்தே போலீஸ்காரர் என்பதை கண்டுபிடித்து விடலாம். ஆனால் மத்திய பிரதேசத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் இதற்கு மாறாக நீளமாக மீசை வளர்த்ததற்காக சஸ்பெண்டு ஆகி உள்ளார்.

    அவரது பெயர் ராகேஷ் ராணா. போலீஸ்காரரான இவர் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர் நீளமான மீசை, அதிக முடி வளர்த்திருந்தார். இதை பார்த்த உயர் அதிகாரிகள் அதை குறைக்குமாறு தெரிவித்தனர். ஆனால் அதை அவர் கேட்கவில்லை. இதையடுத்து ராகேஷ் ராணாவை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர் பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×