என் மலர்
இந்தியா

பஸ் விபத்து
ஆற்றில் பஸ் கவிழ்ந்து குழந்தை உள்பட 3 பேர் பலி
அலிராஜ்பூர் அருகே பஸ்சை ஓட்டும் போது டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அலிராஜ்பூர்:
குஜராத் மாநிலம் சோட்டா உதயப்பூர் என்ற இடத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூருக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. இன்று காலை 6 மணி அளவில் சந்த்பூர் கிராமத்திற்கு சென்றபோது திடீரென பஸ் அங்குள்ள ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் இறந்தனர். 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்சை ஓட்டும் போது டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story






