என் மலர்tooltip icon

    இந்தியா

    வேலைக்கு விண்ணப்பிக்க குவிந்த மக்கள்
    X
    வேலைக்கு விண்ணப்பிக்க குவிந்த மக்கள்

    மத்திய பிரதேசத்தில் 15 பியூன், ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்க 11,000 பேர் குவிந்ததால் பரபரப்பு

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 95 பேர் வேலை கிடைக்காமல் தற்கொலை செய்துக்கொண்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    குவாலியர்:

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகராட்சியில் பியூன், ஓட்டுநர் மற்றும் காவலர் ஆகிய பணிகளுக்கான 15 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 11,000 பேர் குவிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மத்திய  பிரதேசத்தில் மட்டுமில்லாமல் உத்தரப்பிரதேசத்தில் இருந்தும் பலர் வந்தனர். பியூன், ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல், எம்.பி.ஏ, முனைவர் பட்டம் படித்தவர்கள் கூட காத்திருந்தது அம்மாநில வேலையின்மையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் 1 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருக்கிறது. 32 லட்சத்து 57 ஆயிரத்து 136 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இருப்பினும் இந்த காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    அரசாங்கம் சமீபத்தில் அறிவித்த குறைந்த சம்பளமுடைய தெருவோர வியாபாரிகள் திட்டத்திற்கு 15 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் என்றும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 99,000 பேரில் 90 சதவீதம் பேர் பட்டதாரிகள் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 95 பேர் வேலை கிடைக்காமல் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×