search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கின் குற்றவாளி மரணம்

    கரசேவகர்கள் சென்ற சபர்மதி ரெயில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ராவில் வன்முறைக் கும்பலால் எரிக்கப்பட்டதில் 59 பேர் கொல்லப்பட்டனர்.
    வதோதரா:

    கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பிலால் இஸ்மாயில் அப்துல் மஜித் என்ற ஹாஜி பிலால் (வயது 61), வதோதரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், பிலால் உடல்நிலை கடந்த 22ம் தேதி மோசமடைந்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வதோதராவில் உள்ள எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இத்தகவலை துணை கமிஷனர் ரஜோர் உறுதி செய்தார். 

    கரசேவகர்கள் சென்ற சபர்மதி ரெயில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி கோத்ராவில் வன்முறைக் கும்பலால் எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் பிலால் உள்ளிட்ட 11 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். முதலில் இவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் குஜராத் உயர்  நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×