search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டு வெடிப்பு நடந்த ராணுவ முகாம்
    X
    குண்டு வெடிப்பு நடந்த ராணுவ முகாம்

    பதான்கோட் ராணுவ முகாம் அருகே கையெறி குண்டு வீச்சு

    ராணுவ முகாம் அருகே மர்ம நபர்கள் சிலர் கையெறி குண்டை வீசி சென்றதை அடுத்து, அப்பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
    பதான்கோட்:

    பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் அமைந்துள்ள ராணுவ கன்டோன்மென்ட் அருகே இன்று திடீரென குண்டு வெடித்தது.  இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் அங்கு சோதனை நடத்தியதில், கையெறி குண்டுகளின் பாகங்கள் கிடப்பதை கண்டனர். இதன் எதிரொலியால், அப்பகுதி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    கையெறி குண்டு பாகங்கள்

    இதுகுறித்து உயர் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேந்திர லம்பா கூறுகையில், " ராணுவ கன்டோன்மென்ட்டின் திரிவேணி வாயில் முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்கள் கைக்குண்டை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. அதனை ஆய்வு செய்து வருகிறோம்.

    இந்த கையெறி குண்டு வெடிப்பில் எந்த சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும், அப்பகுதியில் உஷார்படுத்தப்பட்டுள்ளோம்.

    குறிப்பாக பஞ்சாபின் எல்லை மாவட்டங்களான பதான்கோட் மற்றும் குர்தாஸ்பூர், 2016 அன்று பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளம் மற்றும் அருகிலுள்ள ராணுவத்தின் மாமூன் கன்டோன்மென்ட்  உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
     
     குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பஞ்சாப் காவல்துறையைத் தவிர, எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) மற்றும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் பணியாளர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படியுங்கள்.. ஜீன்ஸ் பேண்டில் மறைத்து ரூ.2.13 கோடி தங்கம் கடத்திய வாலிபர்கள் கைது
    Next Story
    ×