என் மலர்

  செய்திகள்

  அகிலேஷ் யாதவ்
  X
  அகிலேஷ் யாதவ்

  தேர்தலில் மாயாஜாலம் நிகழ்த்தும் - அகிலேஷ் யாதவ் அறிமுகம் செய்த வாசனை திரவியம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேச தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தனது கட்சியின் வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்தினார்.
  லக்னோ:

  ‘சமாஜ்வாதி அத்தர்’ என்று அழைக்கப்படும் இந்த வாசனை திரவியத்தின் பெட்டியில் அகிலேஷ் யாதவ் படத்துடன் கட்சியின் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.சி. பம்மி ஜெயின் தயாரித்த, இந்த வாசனை திரவியம் 22 இயற்கை வாசனைகளால் ஆனது. இது மற்ற வாசனை திரவியங்களை விட நீண்ட நேரம் நீடிக்கும் என்று கட்சி தெரிவித்துள்ளது.

  இது குறித்து பேசிய அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

  அகிலேஷ் யாதவ்

  இந்த வாசனை அனைவருக்கும் சொந்தமானது, ஆனால் பொய்யின் மூலம் மலர்ந்த மலர் ஒருபோதும் நறுமணத்தைத் தராது, இது பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையைக் குறிக்கிறது

  இதனை மக்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் சோசலிச வாசனை வீசுவார்கள். இந்த வாசனை திரவியம் 2022 இல் வெறுப்பை முடிவுக்குக் கொண்டுவரும், இந்த வாசனை  தேர்தலில் மாயாஜாலம் நிகழ்த்தும்” என தெரிவித்தார். 

  இந்த செய்தி டுவிட்டரில் வைரலாகி வருகிறது, இந்த வாசனை திரவியத்தை நெட்டிசன்கள் வேகமாக டிரோல் செய்து வருகின்றனர்.

  வாசனைத் தொழிலுக்கு பெயர் பெற்ற கன்னோஜ் மாவட்டத்தை சேர்ந்த சமாஜ்வாதி எம்.எல்.சிபம்மி ஜெயின் இதை வடிவமைத்து உள்ளார்.

  வாசனை திரவிய பாட்டிலில் உள்ள வண்ணங்கள் சமாஜ்வாடி கட்சியின் கொடியை ஒத்திருக்கிறது - ஆலிவ் பச்சை மற்றும் சிவப்பு. அதை தயாரித்த எம்.எல்.ஏ  நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை" வாசனை திரவியங்கள் உள்ளன என கூறினார்.

  Next Story
  ×