search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காத 14 மாநிலங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ள நிலையில், 22 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாட் வரியை குறைத்துள்ளன.
    மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை ரூ.10 என்ற அளவிலும் குறைத்தது. இதனால் நேற்று நள்ளிரவில் இருந்து இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது.

    கலால் வரியை குறைத்த மத்திய அரசு, மக்கள் மேலும் பயனடையும் வகையில் மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

    அதன்படி 24 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளது. ஆனால் 14 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாட் வரியை குறைக்கவில்லை.

    கர்நாடக மாநிலம் பெட்ரோல் விலையை அதிகபட்சமாக ரூ. 13.35 குறைத்துள்ளது. புதுச்சேரி ரூ. 12.85, மிசோரம் ரூ. 12.62 என்ற அளவில் குறைத்துள்ளது.

    கர்நாடக அரசு டீசல் விலையை ரூ. 19.49 என்ற அளவிற்கு குறைத்துள்ளது.
    Next Story
    ×