என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  மதுராவில் கோர விபத்து- அமைச்சரை விழாவிற்கு அழைக்கச் சென்ற 4 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சாலை தடுப்பை உடைத்துகொண்டு எதிர்புறம் உள்ள சாலையில் பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.
  மதுரா:

  உத்தர பிரதேசே மாநிலம் நொய்டாவில் இருந்து கான்பூர் நோக்கி சென்ற காரும், தனியார் பேருந்தும் மதுரா மாவட்டத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சாலை தடுப்பை உடைத்துகொண்டு எதிர்புறம் உள்ள சாலையில் பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. 

  காரில் பயணித்த 4 பேர், பேருந்து டிரைவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். இந்த விபத்து தொடர்பாக நுஜீல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

  காரில் இருந்தவர்கள் அமைச்சர் ஒருவரை விழாவிற்கு அழைப்பதற்காக கான்பூரில் இருந்து நொய்டா நோக்கி சென்றபோது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×