search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சையது அலி ஷா கிலானி
    X
    சையது அலி ஷா கிலானி

    காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார்

    காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான சையது அலி ஷா கிலானி ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
    காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் எழுப்பி வந்தவர் கிலானி. 92 வயதான இவர் நேற்று காலமானார். கடந்த 11 ஆண்டுகளில் பெரும்பாலான காலத்தை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். கிலானியின் வீட்டைச் சுற்றி இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    கிலானி மரணமடைந்ததைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இணைய தள வசதி துண்டிப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஹைதர்போராவில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று காலை நடைபெற இருக்கிறது.

    கிலானியின் மரணத்துக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ‘‘பல்வேறு அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் மீது பெரிதும் மரியாதை வைத்திருந்தேன்’’ என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×