என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
ஜம்மு-காஷ்மீர்: துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி பலி- பயங்கரவாதியும் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி பலியான நிலையில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தன்னா கிராமத்தின் காட்டுப்பகுதியில் ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீசாருடன் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுவீழ்த்தப்பட்டார். அதேவேளையில் ராணுவ ஜூனியர் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
Next Story