என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
பிரதமர் மோடி
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் - 7வது கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நிறைவடைந்தது
By
மாலை மலர்23 April 2021 6:40 PM GMT (Updated: 23 April 2021 6:40 PM GMT)

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இதுவரை 6 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 223 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.
இந்நிலையில், வரும் 26-ம் தேதி 36 தொகுதிகளில் 7-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தாமன், தக்ஷின் தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன.
பொதுவாக, வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் பிரசாரம் நிறைவடையும். ஆனால், கொரோனா பிரச்சினையால் 72 மணி நேரத்துக்கு முன்பே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 7-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 36 தொகுதிகளிலும் மாலை 6.30 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. தேர்தல் பிரசாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் பெரிய அளவிலான தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்துவதை கைவிட்டுள்ளன.

பிரதமர் மோடி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் பொதுக்கூட்டங்களை ரத்து செய்துவிட்டனர். மோடி நேற்று 4 மாவட்ட வாக்காளர்களிடையே காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தார்.
இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 29-ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடக்கிறது.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 223 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.
இந்நிலையில், வரும் 26-ம் தேதி 36 தொகுதிகளில் 7-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மால்டா, கொல்கத்தா தெற்கு, முர்ஷிதாபாத், மேற்கு பர்தாமன், தக்ஷின் தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன.
பொதுவாக, வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் பிரசாரம் நிறைவடையும். ஆனால், கொரோனா பிரச்சினையால் 72 மணி நேரத்துக்கு முன்பே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 7-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 36 தொகுதிகளிலும் மாலை 6.30 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. தேர்தல் பிரசாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் பெரிய அளவிலான தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்துவதை கைவிட்டுள்ளன.

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 29-ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடக்கிறது.
Next Story
×