என் மலர்
செய்திகள்

முகல் தோட்டம்
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டம் சனிக்கிழமை திறப்பு
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக வருகிற சனிக்கிழமை திறக்கப்படுகிறது.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் (முகாலய) தோட்டம் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.
தினந்தோறும் காலை 10 மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து இருக்கும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
ஆன்லைன் மூலம் ஒவ்வொரு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளது. கடைசியாக 4 மணிக்குப்பின் பார்வையிட அனுமதி கிடையாது.
பிப்ரவரி 13-ந்தேதியில் இருந்து மார்ச் மாதம் 21-ந்தேதி வரை திறந்திருக்கும். வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பராமரிப்பு வேலைக்காக மூடப்படும்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 100 பேர் அனுமதிக்கப்படுவார்கள். பார்வையிடும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
Next Story