என் மலர்

    செய்திகள்

    பவன்குமார் பன்சால்
    X
    பவன்குமார் பன்சால்

    அகமது படேல் மறைவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய பொருளாளர் நியமனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அகமது படேல் மறைவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு புதிய பொருளாளராக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக பொறுப்பாளர் பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேல் கடந்த 25-ந் தேதி மரணம் அடைந்தார். இதனால் கட்சியில் பொருளாளர் பதவி காலியானது. இந்தநிலையில், பொருளாளரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக இடைக்கால நடவடிக்கை என்ற அளவில் புதிய பொருளாளராக, காங்கிரஸ் கட்சியின் நிர்வாக பொறுப்பாளர் பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இவருக்கு கூடுதல் பொறுப்பாக பொருளாளர் பதவியை தலைவர் சோனியாகாந்தி வழங்கி இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×